ADDED : மே 30, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம், குப்பம் செல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், 53.
இவர் கடந்த, 28 ல் வேலாயுதம்பாளையம் காகித ஆலைக்கு, டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற சரக்குவேன், மொபட் மீது மோதியது. அதில், கீழே விழுந்த சண்முகம், தலையில் அடி பட்டு உயிரிழந்தார். சண்முகத்தின் மகன் சுதாகர், 28; கொடுத்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.