/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் 29ல் படி பூஜை
/
பாலமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் 29ல் படி பூஜை
ADDED : செப் 11, 2024 06:33 AM
கரூர்: க.பரமத்தி அருகே, பாலமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் வரும், 29ல் படி பூஜை நடக்கிறது. கரூர் மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் பாலமலையில் பிரசித்தி பெற்ற, பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. அங்கு வரும், 29 காலை, 7:30 மணிக்கு கந்தர் அநுபூதி பாராயணத்துடன் கிரிவலம், 8:30 மணிக்கு விநா-யகர் பூஜையை தொடர்ந்து, அனைத்து படிகளுக்கும், திருப்புகழ் பாடி பூஜை நடக்கிறது. மதியம், 12:30 மணிக்கு பாலசுப்பிரமணிய
மூலவருக்கு, சிறப்பு அபி ேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, பாலமலை திருப்புகழ் திருப்படி விழா குழு பக்-தர்கள் செய்து வருகின்றனர்.

