ADDED : மே 17, 2024 02:24 AM
அரவக்குறிச்சி: தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தபோது, மின்சாரம் தாக்கி பெயின்டர் இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வெளியம்பாக்கம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ஹரி, 34. இவர், அரவக்குறிச்சி அருகே டெக்ஸ் பார்க்கில் உள்ள தனியார் நிறுவனத்தின் மகளிர் விடுதியில், நேற்று முன்தினம் பெயின்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கதவில் மின்சாரம் பாய்ந்தது தெரியாமல் கையை வைத்துள்ளார். இதில் அவர் துாக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஹரியின் சகோதரர் ரமேஷ் அளித்த புகார்படி,
அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

