/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகிளிப்பட்டி கிராமத்தில் பந்தல் காய்கறி சாகுபடி
/
மகிளிப்பட்டி கிராமத்தில் பந்தல் காய்கறி சாகுபடி
ADDED : மே 30, 2024 01:39 AM
கிருஷ்ணராயபுரம், மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் பந்தல் காய்கறி சாகுபடி மூலம் காய்கறிகள் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி கிராமத்தில், விவசாயிகள் பந்தல் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதில், பீர்க்கன், பாகற் காய் விதைகள் நடவு செய்து பந்தல் அமைத்து அதன் மூலம் படர்ந்து செடிகள் வளர்ந்து வருகின்றன. மேலும், கிணற்று நீர் பாசன முறையில் காய்கறி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. செடிகள் பந்தல் முறையில் படர்ந்து பூக்கள் பூத்து காய்கள் வளர்ந்து வருகின்றன. வளர்ந்து வரும் செடிகளில் காய்கறிகள் பறிக்கப்பட்டு உள்ளூர் வார சந்தைகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சாகுபடி மூலம் காய்கறிகள் சேதமின்றி ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.