/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கனரக வாகனங்கள் நிறுத்தம் போக்குவரத்து நெரிசல்
/
கனரக வாகனங்கள் நிறுத்தம் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஆக 20, 2024 02:57 AM
கரூர்: சர்வீஸ் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் நகரை சுற்றிலும் திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு பைபாஸ் சாலை செல்கிறது. இதில், திருக்காம்புலியூர் மற்றும் வெங்ககல்பட்டி அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. முக்கிய மேம்பாலங்களில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலைகளில், கனகர வாகனங்கள் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.