/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., சார்பில் பேச்சு போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
தி.மு.க., சார்பில் பேச்சு போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு
தி.மு.க., சார்பில் பேச்சு போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு
தி.மு.க., சார்பில் பேச்சு போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : ஆக 18, 2024 03:03 AM
கரூர்: கரூர் திண்ணப்பா தியேட்டர் அருகில் ஆர்த்தி அழகம்மை மஹாலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் பேச்சு போட்டி நடந்தது.
இதில், இளைஞர் அணி அமைப்பாளர் சக்திவேல் தலைமை வ-கித்தார். ஈரோடு எம்.பி.,பிரகாஷ் பேசினார். பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டி நடந்தது. ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் முதல் பரிசு, 25 ஆயிரம் ரூபாய், இரண்டா-வது பரிசு, 15 ஆயிரம், 3வது பரிசு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்-படுகிறது. நடுவர்களாக கம்பம் செல்வேந்திரன், எம்.எல்.ஏ., தாயகம் கவி, முன்னாள் எம்.பி., அன்பழகன் ஆகியோர் இருந்-தனர்.
எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசு, ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.