/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாதாள சாக்கடை சீரமைப்பு பகுதியில் சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
பாதாள சாக்கடை சீரமைப்பு பகுதியில் சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
பாதாள சாக்கடை சீரமைப்பு பகுதியில் சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
பாதாள சாக்கடை சீரமைப்பு பகுதியில் சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 09, 2024 02:59 AM
கரூர்: பாதாள சாக்கடை சீரமைப்பு பணி நடந்த இடத்தில், தார்ச்-சாலை அமைக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர், -வாங்கல் சாலை பழைய நீதிமன்றம் அருகே, பாதாள சாக்-கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, மீண்டும் பள்ளம் விழுந்தது. பாதாள சாக்கடை குழாய் மாற்றுவது உள்-ளிட்ட, மாநகராட்சி சார்பில், 19 லட்சம் ரூபாய் செலவில் சீர-மைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. இரண்டு மாதமாக கரூரில் இருந்து, கருப்பாயி கோவில் தெரு வழியாக நெரூர், வாங்கல், பசுபதிபாளையம், தொழிற்பேட்டை பகுதிகளுக்கு செல்லும் மக்கள், மாற்று பாதையில் சுற்றி, சென்று வந்தனர். போக்குவரத்து சிக்கலில் மக்கள் தவித்து வந்தனர். ஒரு வழியாக பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் போக்குவரத்-துக்கு திறந்து விடப்பட்டது.
ஆனால், அப்பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இரவு நேரத்தில் டூவீ-லர்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, பாதாள சாக்கடை பணி நிறைவு பெற்ற நிலையில், தார்ச்சாலை அமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்-டியது அவசியம்.