ADDED : ஏப் 26, 2024 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்-தாளியம்பட்டி பகுதியில் இருந்து, மேட்டுப்பட்டி வரை செல்லும் தார் சாலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, தாளியம்பட்டி சந்தை நான்கு சாலை சந்திப்பில் இருந்து, மேட்டுப்பட்டி அய்யர்மலை பிரிவு வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக வாகனங்களில் மக்கள் சென்று வருகின்றனர். இதில் மேட்டுப்பட்டி பிரிவு சாலை அருகில், பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக இருக்கிறது.
இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையில் உள்ள பள்ளங்களுக்கு தற்காலிகமாக மண் கொட்டி நிரவி சரி செய்து, மக்கள் வாகனங்களில் எந்த விதமாக சிரமம் இன்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

