/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க மக்கள் கோரிக்கை
/
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க மக்கள் கோரிக்கை
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க மக்கள் கோரிக்கை
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க மக்கள் கோரிக்கை
ADDED : மே 01, 2024 02:09 AM
அரவக்குறிச்சி:பள்ளி தேர்வுகள் முடிந்து, மாணவ, மாணவியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள சிறுவர்கள் தங்களது பெற்றோரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். மோட்டார் வாகன சட்டப்படி, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சிறுவர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
அரவக்குறிச்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், சிறுவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பெற்றோரும் கண்டிக்காமல் இருப்பதால், விபத்துகள் அதிகரித்து வருகிறது.
எனவே, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தி, விபத்துகளை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.