/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வளர்ச்சி பணிகள் குறித்து மனு வழங்கிய மக்கள்
/
வளர்ச்சி பணிகள் குறித்து மனு வழங்கிய மக்கள்
ADDED : ஜூன் 19, 2024 01:42 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பஞ்சாயத்து வளர்ச்சி பணிகள் குறித்து, மனுக்கள் பெறும் நிகழ்ச்சி கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்தார். இதில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, 13 பஞ்சாயத்து பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகள் குறித்து, அந்தந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் யூனியன் கவுன்சிலர்களிடம் எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மனுக்கள் குறித்து விசாரித்து அதற்கான நிதி ஒப்புதல் பெறப்பட்டு வளர்ச்சி பணிகள் செய்யப்படும் என்றார்.
யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணராய
புரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர்
கதிரவன், தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கரிகாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.