/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டு வசதி வாரிய பூங்கா சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
வீட்டு வசதி வாரிய பூங்கா சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 12, 2024 01:23 AM
கரூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள, சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்டு, தான்தோன்றிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, சிறுவர் பூங்கா வளாகம் அமைத்து தரப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு, பூங்கா வளாகத்தில உள்ள உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், சிறுவர்கள் விளையாட முடியாத நிலை உள்ளது. எனவே, பூங்கா வளாகத்தை புதுப்பித்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.