/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிபந்தனை பட்டா நிலம் விற்பதை எதிர்த்து மனு
/
நிபந்தனை பட்டா நிலம் விற்பதை எதிர்த்து மனு
ADDED : மார் 04, 2025 06:11 AM
ஈரோடு: பவானி தாலுகா ஊராட்சிகோட்டை கிராம மக்கள், தமிழக வாழ்-வுரிமை கட்சி மாவட்ட செயலர் பழனிசாமி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதா-வது: பவானி தாலுகா குறிச்சி மலை பகுதியில், 1981ல் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாய பணி செய்ய, நிபந்தனையுடன் நிலங்களும், பட்டாவும் வழங்கினர். இந்நிலத்தை பட்டா பெற்-றவர் மட்டுமே பயன்படுத்த இயலும். மற்றவர்களுக்கு விற்க இய-லாது.
சமீபமாக நிபந்தனை பட்டா நிலங்களை சிலர், வேறு பெயர்க-ளுக்கு மாற்றி விற்பனை செய்துள்ளனர். இதுபோன்ற மோசடி நடப்பதை முன்னதாகவே அறிந்து, கலெக்டர் அலுவலகம், கோபி ஆர்.டி.ஓ., - பவானி தாசில்தார் என பலருக்கு புகார் தெரி-வித்தோம். நடவடிக்கை முழுமை பெறும் முன் விற்பனை செய்-துள்ளனர். அம்மாபேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேபனை கடிதம் வழங்கியும் ஆவண பதிவு நடந்துள்ளது. இதுபற்றி விசா-ரித்து, நிபந்தனை பட்டாவை விற்பனை செய்தவர்கள், வாங்-கியோர், உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.