/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே புகைப்பட கண்காட்சி
/
அரவக்குறிச்சி அருகே புகைப்பட கண்காட்சி
ADDED : ஆக 07, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி,
தமிழக அரசின் சாதனைகள் குறித்த, புகைப்பட கண்காட்சி அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலுாரில் நடந்தது.
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மொடக்கூர் மேற்கு ஊராட்சி கோவிலுாரில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றது. கண்காட்சியை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பார்வையிட்டனர். கண்காட்சியில் தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா, இலவச மிதிவண்டி, இலவச தையல் மெஷின் மக்களுக்கு வழங்கியது உள்பட எண்ணற்ற திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.