/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தபால் ஓட்டுக்களை பதிவு செய்த போலீசார்
/
தபால் ஓட்டுக்களை பதிவு செய்த போலீசார்
ADDED : ஏப் 14, 2024 08:08 AM
கரூர் : கரூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஓட்டுச்சாவடி மையத்தில், போலீசார் தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர். இந்த மையத்தை, மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
கரூர் மாவட்ட தேர்தல் பணிகளில், 1,285 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள், தபால் ஓட்டு செலுத்தும் வகையில் சிறப்பு ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று போலீசார் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தபால் ஓட்டுப்பதிவு பணிகளை வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பார்வையிடும் வகையில், வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு கூறினார்.
ஆய்வின்போது. மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் கண்ணன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சையது காதர் உள்பட பலர் உடனிருந்தனர்.

