/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜூன் 21ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
ஜூன் 21ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 17, 2024 01:11 AM
கரூர்: ஜூன் 21ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஜூன் 21 ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 50க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்துகொண்டு பணி வாய்ப்பை பெறலாம்.
கரூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிவர குறிப்பு, உரியகல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். விவரங்களுக்கு 04324-223555,9789123085 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.