ADDED : ஏப் 27, 2024 10:00 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, தண்ணீர்பள்ளியில் உள்ள வேளாண்மை அலுவலகம் மற்றும் முசிறி தனியார் வேளாண் கல்லூரி மாணவிகள் இணைந்து இயற்கை விவசாயம் மேற்கொள்ளுதல் குறித்து விவசாயிகளுடன் செயல் முறை விளக்க கூட்டம் நடைபெற்றது.வேளாண்மை இயக்குனர் சுரேந்திரன் தலைமை வகித்தார். வட்டார டெக்னிக்கல் மேலாளர் செல்வேந்திரன், வேளாண்மை அலுவலர் ஜீவாமிர்தம் ஆகியோர் பஞ்சகாவ்யா, மீன் அமிலம், 3ஜி கரைசல், மண்புழு உரம், உழவன் செயலி, கிசான் கிரடிட் கார்டு, பறவைகளை விரட்டும் முறை போன்ற தலைப்புகளில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் நடத்தினர்.
கரூர் - கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
கரூர்: கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் ஏற்பட்ட குழிகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் வழியாக கோவை, ஊட்டி மற்றும் கேரளா மாநிலங்களுக்கு நாள்தோறும், தேசிய நெடுஞ்சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கிறது. கரூரில் இருந்து கோவை செல்லும் சாலைகளில், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.
சாலையின் நடு பகுதியில் குழிகள் அதிகம் உள்ளதால், இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் அதிக பாதிப்புக்களாகி வருகி றது. குறிப்பாக, க.பரமத்தியில் இருந்து தென்னிலை வரை உள்ள, அதிகப்படியான குழிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டியது அவசியம்.
தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, மில் மற்றும் கார்மெண்ட்ஸ் பணிக்கு செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட ஆணைக்குழு பற்றியும், தொழிலாளர்களுக்கான நலச்சட்டங்கள், அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான விஜய் கார்த்திக், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் திருநந்தன், தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் அந்தோணி ஜெனிட், வெண்ணந்துார் எஸ்.ஐ., ராஜேந்திரன், விசைத்தறி தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் கலைவாணன் உள்ளிட்டோர், தொழிலாளர்களின் நலம் சார்ந்த பல்வேறு தகவல்களை கூறினர். 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

