/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புலியூர் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
/
புலியூர் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
ADDED : ஜூன் 29, 2024 02:30 AM
கரூர்: புலியூர் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம், தலைவர் புவனேஷ்வரி தலைமையில், பஞ்., அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
அதில், இ.கம்யூ., கட்சி கவுன்சிலர் கலா ராணி, முதலாவது வார்டில் தெரு விளக்குகள், சீரான குடிநீர் வினியோகம், சாக்கடை துார் வாரும் பணிகள், கடந்த இரண்டரை ஆண்டுகளாக முறையாக நடக்கவில்லை என புகார் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, நான்காவது வார்டு பா.ஜ., கவுன்சிலர் விஜயகுமார், சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை பராமரிக்க வேண்டும், வார்டு பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என தெரிவித்தார். பிறகு, 10 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஆனந்தன், மழை நீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக கூட்டத்தில், 29 தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட் டது.
கூட்டத்தில், துணைத்தலைவர் அம்மையப்பன், செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.