/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் சுற்று வட்டாரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை
/
கரூர் சுற்று வட்டாரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை
ADDED : மே 18, 2024 01:20 AM
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல், கோடை மழை பெய்து வருகிறது. வரும், 20 வரை தமிழகம், புதுவையில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. கரூர் மாவட்டத்திலும் கடந்த, ஒரு வாரமாக, ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை கரூர் நகரம், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, வெங்கமேடு, காந்தி கிராமம், திருமாநிலையூர், செல்லாண்டிப்பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அரைமணி நேரம் விட்டு, விட்டு பெய்த மழை காரணமாக, நகரில் குளிரான சீதோஷ்ண நிலை இருந்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, புழுக்கத்தில் இருந்த பொதுமக்கள், குளிர்ந்த காற்றுடன் வீசிய மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.
* அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பள்ளப்பட்டியில் மதியம் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. சாலையில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதேபோல அரவக்குறிச்சியில் மாலை, 4:00 மணியளவில் சாரல் மழை பெய்தது. கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இந்த வாரத்தில் இரண்டு முறை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

