/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து இல்லை

ADDED : ஆக 08, 2024 12:46 AM
கரூர்:திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,012 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு வினாடிக்கு, 1,108 கன அடியாக அதிகரித்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 883 கன அடியில் இருந்து, 300 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதனால், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து நின்றது. அமராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 88.98 அடியாக இருந்தது.
கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 49 ஆயிரத்து, 693 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, 16 ஆயிரத்து, 92 கன அடியாக சரிந்தது. அத்தண்ணீர் முழுதும், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், தென்கரை வாய்க்காலில், 800 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணிக்கு வினாடிக்கு, 37 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.94 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.