/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்சார பெட்டிகளை சீரமைக்க வேண்டும்
/
மின்சார பெட்டிகளை சீரமைக்க வேண்டும்
ADDED : ஜூன் 19, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்தோன்றிமலை, கரூர் அருகே சணப்பிரட்டி அக்ரஹாரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. மேலும், அந்த பகுதியில் கோவில், பள்ளிகள் உள்ளன. அதற்கு, மின் இணைப்புகள் வழங்க குடியிருப்பு பகுதிகளில் மின்சார கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தாழ்வான நிலையில் உள்ள கம்பங்களில் உள்ள சுவிட்ச் பெட்டிகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும், பெட்டிகள் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. சில பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது. அதை, தெருவில் விளையாடும் குழந்தைகள் தொடும் அபாயம் உள்ளது. திறந்த நிலையில் பழுதடைந்துள்ள சுவிட்ச் பெட்டிகளை பராமரிக்கக நடவடிக்கை எடுக்க வேண்டும்.