/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூங்கா மின் விளக்கு பழுது பொது மக்கள் பாதிப்பு
/
பூங்கா மின் விளக்கு பழுது பொது மக்கள் பாதிப்பு
ADDED : செப் 05, 2024 02:36 AM
குளித்தலை: சிறுவர் பூங்காவில் உள்ள மின் விளக்குகளை எரிய வைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.
குளித்தலை நகராட்சி பகுதியில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக பெரியார் நகர், அண்ணா நகரில் இரண்டு பூங்-காக்கள் மற்றும் பாரதி நகரில் பழைய சிறுவர் பூங்கா பராம-ரிக்கப்பட்டு, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.பூங்காவில் தரமான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கா-ததால், பொருட்கள் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. பாரதிந-கரில் உள்ள சிறுவர் பூங்கா, நகரின் மத்தியில் இருப்பதால் மாலை, இரவு நேரங்களில் அதிகளவு பொது மக்கள் வரு-கின்றனர். ஆனால் இங்குள்ள மின் விளக்கு பழுது ஏற்பட்டதால், இரவு நேரங்களில் குழந்தைகள், தாய்மார்கள் அவதிப்படுகின்-றனர்,
மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.