/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாலுகா அலுவலகம் முன் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
/
தாலுகா அலுவலகம் முன் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
ADDED : ஜூன் 14, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். அலுவலகம் முன்பு பஸ்கள் நின்று செல்வது கிடையாது. பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து நடந்து வரவேண்டிய நிலை உள்ளது. நலத்திட்ட உதவி உட்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற கர்ப்பிணிகள், முதியவர்கள் சிரமத்துடன் வந்து செல்கின்றனர். அலுவலகம் முன் பஸ்கள் நின்று செல்ல பல முறை அதிகாரிகளிடம், மக்கள் வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கரூர், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அலுவலகம் உள்ளதால் அனைத்து
பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.