/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவு நீர் சாக்கடையை உயர்த்தி கட்டித்தர கோரிக்கை
/
கழிவு நீர் சாக்கடையை உயர்த்தி கட்டித்தர கோரிக்கை
ADDED : செப் 09, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி டவுன் பஞ்.,க்குட்பட்ட, 15 வார்டுகளில் பழைய சாலை, கழிவு நீர் சாக்கடைகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் சாலை அரை அடிக்கும் மேல் உயர்ந்துள்ளதால், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் சாக்கடை பள்ளத்திற்கு சென்றது.இதனால் இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி, சாக்கடையில் விழும் அபாயம் உள்ளது. நடந்து செல்லும் முதியவர்கள், தடுமாறி சாக்கடையில் விழும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் உள்ள கழிவுநீர் சாக்கடை பள்ளத்தை, சாலையின் மட்டத்திற்கு உயர்த்தி தரும்படி அப்பகுதி மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.