/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கத்தியை காட்டி வழிப்பறிக்கு முயன்ற 2 பேருக்கு 'காப்பு'
/
கத்தியை காட்டி வழிப்பறிக்கு முயன்ற 2 பேருக்கு 'காப்பு'
கத்தியை காட்டி வழிப்பறிக்கு முயன்ற 2 பேருக்கு 'காப்பு'
கத்தியை காட்டி வழிப்பறிக்கு முயன்ற 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஆக 18, 2024 03:23 AM
ப.வேலுார்: திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்தவர் சரவணன், 45. பர-மத்தியில் உள்ள லாரி உரிமையாளரிடம் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, பரமத்தி, மற-வாபாளையம் அருகே, புளிய மரத்தடியில், முதலாளியின் வரு-கைக்காக காத்திருந்தார். அப்போது, டூவீலரில் வந்த, இரண்டு மர்ம நபர்கள், சரவணனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அங்கு வந்த லாரி ஓனர் பாலசுப்பிரமணியம், அப்பகுதி மக்களின் உதவியுடன், இருவரையும் பிடித்து பரமத்தி போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில், கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த ஹரிஹரன், 23, இளையராஜா, 26, என்பதும், இவர்கள் இரு-வரும் வழிப்போக்கில் செல்லும்போது, தனியாக நின்றுகொண்டி-ருக்கும் நபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பரமத்தி போலீசார் இருவ-ரையும் கைது செய்தனர்.