/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஆக 05, 2024 02:23 AM
கரூர், போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை சீரமைத்து தரவேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர், தான்தோன்றிமலை - வள்ளலார் கோவிலிலிருந்து காந்தி கிராமம் செல்லும் சாலை உள்ளது. தான்தோன்றிமலை, காளியப்பனுார், முத்துலாடம்பட்டி, இரட்டைபனை மரம், ஏமூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் காந்தி கிராமத்திற்கு இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.
கரூர் - திருச்சி பிரதான சாலைக்கு செல்வோரும், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும், வள்ளலார் கோவிலுக்கு ஏராளமான பக்தர்களும் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். சாலை அமைக்கப்பட்டு, 15 ஆண்டுகள் மேலாவதால், சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
தார்ச்சாலையானது தற்போது மண்சாலையாக மாறிவிட்டது. மழை காலங்களில் சாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.