/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் குப்பை எரிப்பு: விபத்தில் சிக்கும் வாகன ஓட்-டிகள்
/
சாலையோரம் குப்பை எரிப்பு: விபத்தில் சிக்கும் வாகன ஓட்-டிகள்
சாலையோரம் குப்பை எரிப்பு: விபத்தில் சிக்கும் வாகன ஓட்-டிகள்
சாலையோரம் குப்பை எரிப்பு: விபத்தில் சிக்கும் வாகன ஓட்-டிகள்
ADDED : ஜூலை 14, 2024 02:26 AM
கரூர்: கரூர் தொழிற்பேட்டையில் சாலையோரம் குப்பை தீயிட்டு எரிப்பதால், ஏற்படும் புகையால் கடும் சுகாதார சீர்கேடும், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கரூர் சணப்பிரட்டி தொழிற்பேட்டை சாலையில் டன் கணக்கில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. அங்கு குப்பை அவ்வப்-போது சாலையோரம் தீயிட்டு எரிப்பது இந்த பகுதியில் வாடிக்-கையாக நடந்து வருகிறது. இரு சக்கரவாகனத்தில் செல்பவர்கள், புகை மூட்டத்தால், விபத்தில் சிக்குகின்றனர்.
சேகரிக்கப்படும் குப்பை அங்கிருந்து அகற்றப்பட்டு, குப்பை கிடங்கில் மட்டுமே கொட்டப்பட வேண்டும் என்ற நிலையில், தீயிட்டு எரிப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெ-றாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.