/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் குறித்து வதந்தி; கலெக்டர் எச்சரிக்கை

ADDED : ஆக 18, 2024 03:06 AM
கரூர்: 'மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்-பட உள்ளதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தி' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை
சமூக ஊடகங்களில் எவ்வித முகாந்திரமுமின்றி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும், 17 (நேற்று), 19, 20 ஆகிய நாட்களில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் உள்ளதாகவும், மனுக்களை வழங்கினால் அனைவருக்கும் உடனே உரிமைத்தொகை கிடைக்கும் என்ற தவறான தகவல் பரவி வருகிறது. தகவல் முற்றிலும் தவறானது. பொதுமக்கள் யாரும் மேற்படி தகவலை நம்பவேண்டாம். மேலும் இது-போன்ற தவறான தகவலை பரப்புவோர்மீது போலீஸ் மூலம் கடு-மையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.