/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒட்டச்சாயி அம்மன் கோவிலில் 2,000 பேருக்கு சமபந்தி விருந்து
/
ஒட்டச்சாயி அம்மன் கோவிலில் 2,000 பேருக்கு சமபந்தி விருந்து
ஒட்டச்சாயி அம்மன் கோவிலில் 2,000 பேருக்கு சமபந்தி விருந்து
ஒட்டச்சாயி அம்மன் கோவிலில் 2,000 பேருக்கு சமபந்தி விருந்து
ADDED : ஆக 06, 2024 02:26 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார், கட்டனாச்சம்பட்டி பஞ்., புதுப்பாளையம் - ராசிபுரம் நெடுஞ்சாலையில் ஒட்டச்சாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி மாத அமாவாசை முதலாமாண்டு திருவிழா நடந்தது.
அதையொட்டி, 4 மதியம், 12:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு, 7:00 மணிக்கு, வேண்டுதலாக பக்தர்கள் கோழி சேவலை வழங்கினர்.
நேற்று காலை, 6:30 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின், கோவிலுக்கு காணிக்கையாக தந்த, 200க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு, சமைத்து, 2,000க்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து வைக்கப்பட்டது. இதில் கட்டனாச்சம்பட்டி, புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
செய்தனர்.