/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,569 வழக்குகளுக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,569 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,569 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,569 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 15, 2024 02:43 AM
கரூர்: கரூர் மற்றும் குளித்தலையில் நடந்த, தேசிய மக்கள் நீதிமன்-றத்தில், 1,569 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. நேற்று கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் அரவக்குறிச்சி நீதிமன்றங்களில், தேசிய மக்கள் நீதி-மன்றம் நடந்தது.அதில் வங்கி சிவில் வழக்குகள், காசோலை வழக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு உள்பட, 1,693 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இறுதியாக, 1,569 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 13 கோடியே, 77 லட்-சத்து, 22 ஆயிரத்து, 117 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
கரூரில் நடந்த, தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். அப்-போது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சொர்ணகுமார் (பொ) மற்றும் வக்கீல்கள் உடனிருந்தனர்.