/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் - கோவை சாலையில் சாக்கடை கால்வாய் சீரமைப்பு
/
கரூர் - கோவை சாலையில் சாக்கடை கால்வாய் சீரமைப்பு
ADDED : ஜூலை 07, 2024 03:03 AM
கரூர்:கரூர் - கோவை சாலையில், சாக்கடை கால்வாய் சீரமைக்கப்பட்டு, கழிவு நீர் வெளியேறியது தடுக்கப்பட்டது.
கரூர்-கோவை சாலை மின்வாரிய அலுவலகம் அருகே, சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன், சாலையில் கழிவுநீர் ஓடியது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக அவதிப்பட்டனர்.
இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சாக்கடை கால்வாயில் இருந்த அடைப்பை, சரி செய்யும் பணியில் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால், சாக்கடை கால்வாயில் இருந்து, சாலையில் ஓடிய கழிவு நீர் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.