/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகளுக்கு பாலியல் தொல்லை: சமையல் மாஸ்டர் கைது
/
மகளுக்கு பாலியல் தொல்லை: சமையல் மாஸ்டர் கைது
ADDED : ஆக 17, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: அரவக்குறிச்சி அருகே, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த-தாக, சமையல் மாஸ்டரை, மகளிர் போலீசார் போக்சோ சட்-டத்தின் கீழ் கைது செய்தனர். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த, 32 வயதுடைய சமையல் மாஸ்டர், மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த, 15ல் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். தன், 14 வயது மூத்த மகளுக்கு, சமையல் மாஸ்டர் பாலியல் தொல்லை கொடுத்-துள்ளார். இது குறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சமையல் மாஸ்டரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர்.

