/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மருத்துவக் கல்லுாரி முன் நிழற்கூடம் அமைக்கப்படுமா?
/
கரூர் மருத்துவக் கல்லுாரி முன் நிழற்கூடம் அமைக்கப்படுமா?
கரூர் மருத்துவக் கல்லுாரி முன் நிழற்கூடம் அமைக்கப்படுமா?
கரூர் மருத்துவக் கல்லுாரி முன் நிழற்கூடம் அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 29, 2024 01:45 AM
கரூர்: கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ-மனை, நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்-தோறும், 1,000க்கும் மேற்பட்ட நோயாளிகள், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
பல்வேறு நோய்களுக்காக புறநோயாளிகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து மருத்துவ கல்-லுாரி மருத்துவமனைக்கு, மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன், நிழற்கூடம் இல்லை. நோயாளிகள், பொதுமக்கள் வெயில், மழைக்காலங்-களில், அருகில் உள்ள கடைகளில் தஞ்சமடைகின்றனர்.
தற்போது பலத்த காற்று வீசி வருவதால், சாலையில் நிற்க முடி-யாமல் தவிக்கின்றனர். கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனை முன் நிழற்கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.