/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புன்னை வனநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
/
புன்னை வனநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED : மே 30, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகில், புன்னை வனநாதர் கோவிலில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
புன்னைவன நாதருக்கு பால், தயிர், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்
நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் புன்னைவன நாதர் பக்தர்களுக்கு
காட்சியளித்தார்.