/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கீழ தண்ணீர்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்
/
கீழ தண்ணீர்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஆக 02, 2024 01:48 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., கீழதண்ணீர்பள்ளி கிராமத்தில் கடந்த ஐந்து நாட்களாக பொது மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, குளித்தலை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில், 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில்
உள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கலெக்டர், மாவட்ட சுகாதார பணி இணை இயக்குனர் சந்தோஷ்குமார் ஆகியோருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இனுங்கூர் வட்டார மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையம் மூலம், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையில், மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை, பரிசோதனை, காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக குடிநீர் தொட்டி, குடிநீர் பம்பு, பொது இடத்தில் தேவையில்லாமல் தேங்கி இருக்கும் தண்ணீர், தேங்காய் மட்டை, டயரில் தேங்கிய மழை தண்ணீரை அகற்றி, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.