/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நொய்யல் அருகே சிறப்பு மருத்துவ முகாம்
/
நொய்யல் அருகே சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 12, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, ஜூலை 12-
ஓலப்பாளையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நொய்யல் அருகே உள்ள சிவராமன் நகர் பகுதியில், நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் முதியவர்கள், பாலுாட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை செய்தனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து, அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினர்.