sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

/

கரூர் மாவட்டத்தில் 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

கரூர் மாவட்டத்தில் 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

கரூர் மாவட்டத்தில் 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது


ADDED : செப் 05, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை முன்னிட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருது அளித்து கவுரவித்து வருகிறது. இதன்படி, கரூர் மாவட்டத்திற்கு, தொடக்க, நடுநிலை பள்ளிக்கு மூவரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கு மூவரும், மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் சார்ந்து இருவருக்கும், தனியார் பள்ளி சார்பில் ஒருவர் என ஒன்பது பேருக்கு மாநில நல்லாசிரியருகான விருதுக்கு தேர்வு செயய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறு-வது மகிழ்ச்சியாக இருக்கிறது. 22 ஆண்டு கால ஆசிரியர் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு புதுமையான செயல்பாடுகள் மூலம், மென்-மேலும் செயல்பட இந்த அங்கீகாரம் ஊக்குவிப்பாக உள்ளது. பள்ளிக்

கல்வித்துறைக்கு நன்றி.

-- எஸ்.மனோகரன், இடைநிலை ஆசிரியர், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தான்தோன்றிமலை, கரூர்.

திறமையான மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்று, பொது-மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தொடர்ந்து எனது வகுப்பறை செயல்பாடுகளை சமூக வலைத-ளங்களில் பகிர்ந்து வருகிறேன். இதனால் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.

-- ஏ.எஸ்.சம்சாத் பானு, இடைநிலை ஆசிரியர், ஈசநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,அரவக்குறிச்சி.

கடந்த, 18 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் பணியாற்றி வரு-கிறேன், 14 ஆண்டுகளாக பள்ளி முதல்வராக இருந்துள்ளேன். படிப்பில் பின்தங்கிய மாணவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, மேம்படுத்துவதையே கடமையாக கொண்டுள்ளேன். மாணவர்களை படிப்பில் மட்டும் ஊக்குவிக்-காமல், விளையாட்டிலும் ஊக்குவித்தால் இரண்டிலும் சிறந்து விளங்குவர்.

- ஆர். ராமசாமி, முதல்வர், ஆர்.என். மெட்ரிகுலேஷன்

மேல்நிலைப்பள்ளி, சின்னதாராபுரம்.

பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவியல் துறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம்

தோன்ற வேண்டும். இந்த எண்ணத்தை துாண்டும் வகையில் பாடங்களை நடத்தி வருகிறேன். அவர்கள், வருங்காலத்தில் அறி-வியல் துறையில் சாதிக்க முடியும்.

பள்ளிக்கு நம்பிக்கையுடன் வரும் குழந்தைகள், படிப்பை மட்டும் முடித்துவிட்டு செல்லக்கூடாது. அவர்களுடைய வாழ்க்-கைக்கு தேவையான திறன்களையும் கற்று கொடுத்து அனுப்பி

வைக்கிறோம்.

-- எம்.ரமேஷ், பட்டதாரி ஆசிரியர், சிவாயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குளித்தலை.

கரூர் மாவட்டத்தில் பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரிய-ராக, தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். 2010-11ம் ஆண்டில் தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிருந்தா, வேதியியல் பாடத்தில் மாநில அளவில், 200க்கு 198 மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடம் பிடித்தது மறக்க முடியாத நினைவாக உள்ளது. மாணவர்களுக்கு ஒழுக்கம், தேர்ச்சி விகிதம், விளையாட்டு ஆகியவற்றில் தீவிரம் கவனம் செலுத்தினால் அதி-காரிகள் மட்டுமின்றி மக்களின் பாராட்டுகளையும் பெற முடியும்.

-- சி.விஜயலட்சுமி, தலைமை ஆசிரியர், கரூர் மாவட்ட மாதிரி பள்ளி மாயனுார், கிருஷ்ணராயபுரம்.

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. அவர்களுக்கு மேல் படிப்பு என்ன வாய்ப்பு இருக்கிறது என தொடர்ந்து வழிகாட்டி வருகிறேன். அதனால், பல அரசு பள்ளி மாணவர்களை மருத்துவம், பொறியியல் போன்ற படிப்பு-களை பயின்று உயர்ந்து இருக்கின்றனர். ஏழை, எளிய மக்களும் உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்பது எனது ஆசை. அரசு அளித்துள்ள விருது ஊக்கம்

அளிப்பதாக உள்ளது.

-- ஆர்.முரளி, பட்டதாரி ஆசிரியர், பெரிய குளத்துப்பாளையம்

மேல்நிலைப்பள்ளி, கரூர்

எங்கள் பள்ளியில் அடிப்படை

வசதிகளை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வரு-கிறேன்.

மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல்

குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பள்-ளியை சுற்றி ஏராளமான மரங்களை நட்டு பராமரித்து வரு-கிறோம். இதுபோன்ற செயல்பாடுகளை பாராட்டி விருது வழங்கிய, தமிழக அரசுக்கு

நன்றி.

-- பி.கணேசன், தலைமை ஆசிரியர், பாலவிடுதி அரசு மேல்நி-லைப்பள்ளி, கடவூர்.

மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனம் மூலம், ஆசிரியர்கள் பல்-வேறு வகையாக பயிற்சிகளை அளித்து வருகிறோம். மாணவர்க-ளுக்கு கற்றல் மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகள்

வழங்கப்படுகிறது. மாநில, மாவட்ட அளவில் பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கருத்தாளராக பணியாற்றி வருகிறேன். நான் முதல்வன் திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

-- ஏ.சரவணன், முதுநிலை விரிவுரையாளர் மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனம், மாயனுார்.

மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனம் மூலம், பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் படிக்க உதவும் வகையில், டிஜிட்டல் புத்தகங்களை உருவாக்கும் குழுவில் இடம் பெற்று இருந்தேன். அதில் இரவு, பகலாக பணியாற்றி அந்த புத்தகங்-களை உருவாக்கினோம். அந்த பணி எனக்கு ஆத்ம திருப்தி அளித்தது. மாற்றுத்திறனாளிகள் எளிய முறையில் படிக்க உதவி செய்யும் வகையில் பணியாற்ற விரும்புகிறேன்.

-- கே.ரமணி, முதுநிலை விரிவுரையாளர், மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனம், மாயனுார்.






      Dinamalar
      Follow us