/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை:பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன்
/
கிருஷ்ணராயபுரத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை:பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன்
கிருஷ்ணராயபுரத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை:பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன்
கிருஷ்ணராயபுரத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை:பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன்
ADDED : ஏப் 14, 2024 08:09 AM
கரூர் : கிருஷ்ணராயபுரத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி அளித்து பேசினார்.
கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சின்னம நாயக்கன்பட்டி, நத்தமேடு, கட்டளை, மேல மாயனுார், மலைப்பட்டி, மேட்டு திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், பழைய ஜெயங்கொண்டம், கோவக்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு திரண்டிருந்த பெண்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது, செந்தில்நாதன் பேசியதாவது: கடந்த, 5 ஆண்டுகளாக கரூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற பின், எம்.பி., ஜோதிமணி மக்களை சந்திக்கவில்லை. ஐந்தாண்டுகளாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், 100 வேலை நாள் திட்டத்தை நிறுத்தி விடுவர் என எம்.பி., ஜோதிமணி பொய் பேசி வருகிறார். இதற்குமாறாக, 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலம், பயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்கப்படுகிறது. கிருஷ்ணராயபுரம் பகுதி பின்தங்கி பகுதியாகும். இங்கு, குடிநீர் பற்றாக்குறை உள்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் யார் என்று தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளுக்கு யார் பிரதமர் என்று தெரியவில்லை. மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்க, பா.ஜ.,வுக்கு ஓட்டு போட வேண்டும். இவ்வாறு பேசினார்.
மகளிர் அணி மாநில துணைத்
தலைவர் மீனா வினோத்குமார், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் சரவணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

