ADDED : பிப் 23, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:கல்லுாரி மாணவர் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., சடையம்பட்டியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பிரமணியன், 45. இவரது இளைய மகன் அருண், 21, தொட்டியம் தனியார் பொறியியல் கல்லுாரியில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை, அதே பகுதி வெள்ளைசாமி என்பவரின் கிணற்று பக்கம் அருணின் உறவினர்கள் சென்றபோது, அருணின் செருப்பு அந்த பகுதியில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
முசிறி தீயணைப்பு துறையினர், கிணற்றில் தேடியபோது, கால்கள் கட்டப்பட்ட நிலையில், அருண் சடலமாக மீட்கப்பட்டார். அருண் சடலத்தை கைப்பற்றிய குளித்தலை போலீசார், இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.

