ADDED : மே 11, 2024 07:29 AM
நாமக்கல் : நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த கோடைகால கலை பயிற்சி முகாம், நேற்று நிறைவடைந்தது. நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில், கடந்த, 1ல் துவங்கிய பயிற்சி முகாம் தொடர்ந்து, 10 நாட்கள் நடந்தது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு யோகா, கராத்தே, சிலம்பம், பரதநாட்டியம், ஓவியம், தப்பு, கரகம், காவடி உள்ளிட்ட கிராமிய நடனம், கைவினை பொருட்கள் தயாரிப்பு கலைகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சி முகாம், நேற்று நிறைவடைந்தது. அதற்கான நிறைவு விழா கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (பொ) மரகதம் தலைமை வகித்தார். ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லைசிவக்குமார், கம்பன் கழக தலைவர் சத்திய மூர்த்தி, நாமக்கல் தமிழ் சங்கத்தலைவர் குழந்தைவேல் ஆகியோர், பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.