/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகிளிப்பட்டி பகுதியில்சூரியகாந்தி சாகுபடி பணி
/
மகிளிப்பட்டி பகுதியில்சூரியகாந்தி சாகுபடி பணி
ADDED : செப் 04, 2024 03:07 AM
கிருஷ்ணராயபுரம்;மகிளிப்பட்டி பகுதியில், சூரியகாந்தி சாகுபடி பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சூரியகாந்தியை பரவலாக சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது சூரியகாந்தி செடிகள் வளர்ந்து பூக்கள் பிடித்து வருகிறது. பூக்கள் விளைச்சல் கண்டு வருவதால், சில வாரங்களில் அறுவடை செய்யப்பட உள்ளது. சூரியகாந்தி சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு ஒரளவு வருமானம் கிடைத்து வருகிறது. குறைந்த தண்ணீரில் சாகுபடி நடப்பதால், விவசாயிகளுக்கு செலவு இன்றி வருமானம் கிடைக்கிறது.