/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாசில்தார் 'ஜீப்' கண்ணாடி உடைப்பு: 2 வாலிபர்கள் கைது
/
தாசில்தார் 'ஜீப்' கண்ணாடி உடைப்பு: 2 வாலிபர்கள் கைது
தாசில்தார் 'ஜீப்' கண்ணாடி உடைப்பு: 2 வாலிபர்கள் கைது
தாசில்தார் 'ஜீப்' கண்ணாடி உடைப்பு: 2 வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 14, 2024 01:37 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த கடவூர் தாசில்தார் இளம்பரிதி.
இவர், நேற்று முன்தினம் மாலை, மேட்டுப்பட்டி துர்க்கையம்மன் கோவில் திருவிழாவை மேற்பார்வை செய்வதற்காக, அரசு ஜீப்பில் சென்றுகொண்டிருந்தார். ஜீப்பை மரியலாரன்ஸ், 50, என்பவர் ஓட்டிச்சென்றார். ஆதனுார் பஞ்., எருதிகோன்பட்டி அருகே சென்றபோது, அதே ரோட்டில் கொசூர் பஞ்., கம்பளியாம்பட்டியை சேர்ந்த வீரமணி, 21, வெள்ளமுத்து, 18, உள்பட, நான்கு பேர், 'குடி'போதையில் ஜீப்பை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஜீப்பின் கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து, ஜீப் டிரைவர் மரியலாரன்ஸ் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார், வீரமணி, வெள்ளமுத்து ஆகிய இருவரை கைது செய்தனர்.