/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமிழகம் 5வது இடம்
/
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமிழகம் 5வது இடம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமிழகம் 5வது இடம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமிழகம் 5வது இடம்
ADDED : ஆக 14, 2024 02:31 AM
கரூர்: மத்திய மின்சார ஆணையம் வெளியிட்ட பட்டியலில், தென் மாநிலங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனில், தமி-ழகம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
மின் தேவையை பூர்த்தி செய்வதில், காற்றாலை, சூரியசக்தி மின்-சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, அனைத்து மாநிலங்க-ளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுதும், தமிழகம் பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் பட்டி-யலை, மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டிலேயே ராஜஸ்தான், 15,101 மில்லியன் யூனிட் பெற்று முதலிடம், 13,480 மில்லியன் யூனிட் பெற்று குஜராத் இரண்டாமிடம், 13,301 மில்லியன் யூனிட் பெற்று இமாச்சல பிரதேசம் மூன்ற-மிடம், 9,171 மில்லியன் யூனிட்டுடன் கர்நாடகா நான்காமிடம், 8,379 மில்லியன் யூனிட்டுடன், தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்-ளன. இதில் காற்றாலை மின் உற்பத்தியில், 4,114 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்து, தமிழகம் முன்னணியில் உள்ளது.
சூரியசக்தி மின் உற்பத்தி திறனில், 3,674 மில்லியன் யூனிட் உற்-பத்தி செய்து இரண்டாமிடத்தில் உள்ளது. மத்திய அரசின் அறிவு-றுத்தல்படி, 2030ம் ஆண்டிற்குள், 50 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரி-வித்தனர்.