/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போராட புறப்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டனம்
/
போராட புறப்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டனம்
போராட புறப்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டனம்
போராட புறப்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டனம்
ADDED : ஆக 02, 2024 01:47 AM
கரூர், போராட்டத்திற்கு செல்ல இருந்த, ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் சங்கரமலைப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன், 41. பாப்பயம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர். கடந்த, 30ல் சென்னை பள்ளிக்கல்வி துறையின் டி.பி.ஐ., வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க, பாலமுருகன் உட்பட ஒன்பது பேர் பஸ் மூலம் பயணம் மேற்கொள்ள இருந்தனர். அப்போது கரூர் சுங்ககேட் அருகில், தான்தோன்றிமலை போலீசார் தடுத்தி நிறுத்தினர். பாலமுருகன் உள்பட ஒன்பது பேரையும், 2 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து பின், ஜாமினில் விடுத்துள்ளனர். இதற்கு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் பெரியசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற, டிட்டோஜாக் சார்பில் முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தன. அதில் கலந்து கொள்வதற்காக, கரூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த பாலமுருகன் உட்படஒன்பது ஆசிரியர்களை கைது செய்து வழக்கு பதியப்பட்டுள்ளது.
இது போன்ற கைது நடவடிக்கை தமிழகத்தில் வேறு எங்கும் நடக்காத போது, கரூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியர்கள் மீது எவ்வித வழக்கும் பதிய வேண்டாம் என்று, சென்னை மாநகர கமிஷனர் அறிவுறுத்தி இருந்தார். இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.