/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே மருத்துவ நகரில் தார் சாலை புதிதாக அமைப்பு
/
கரூர் அருகே மருத்துவ நகரில் தார் சாலை புதிதாக அமைப்பு
கரூர் அருகே மருத்துவ நகரில் தார் சாலை புதிதாக அமைப்பு
கரூர் அருகே மருத்துவ நகரில் தார் சாலை புதிதாக அமைப்பு
ADDED : செப் 05, 2024 02:34 AM
கரூர்: கரூர் அருகே, மருத்துவ நகரில் புதிதாக தார் சாலை அமைக்கப்-பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்தில் உள்ள மருத்துவ நகரில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அரசு தொடக்கப்-பள்ளி உள்ளது. ஆனால், அந்த பகுதியில், பல ஆண்டுகளாக மண் சாலை இருந்தது.
இதனால், தார் சாலை அமைக்க கோரி, பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதனால், மருத்துவ நகரில் சில மாதங்களுக்கு முன், புதிதாக தார் சாலை அமைக்க சிமென்ட் கலவையுடன், ஜல்லிக் கற்கள் போடப்பட்டது. ஆனால், உரிய நேரத்தில் மருத்துவ நகரில், தார் சாலை அமைக்கவில்லை. இந்நிலையில், அவ்வப்போது பெய்த மழை காரணமாக, சிமென்ட் கலவை பெரும்பாலும் கரைந்து விட்டதால், ஜல்லிக்கற்கள் மருத்துவ நகரில் சாலையில் சிதறி கிடந்தன.
இதனால், அதன் வழியாக பொதுமக்கள் நடந்து கூட, செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டனர். இதுகுறித்து, நமது நாளி-தழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து, மருத்துவ நகர் பகுதியில், புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவ நகரில் வசிக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.