/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி: மூவர் படுகாயம்
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி: மூவர் படுகாயம்
பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி: மூவர் படுகாயம்
பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி: மூவர் படுகாயம்
ADDED : மார் 25, 2024 01:29 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த வைகைநல்லுார் பஞ்., தெற்கு மைலாடி கிராமத்தை சேர்ந்தவர்கள்
மோகன், 23, திருப்பதி, 18, ஆகிய இருவரும், பைக்கில் சொந்த வேலையாக
குளித்தலை சென்றனர். பின், குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை,
வை.புதுார் இரட்டை வாய்க்கால் அருகே திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது,
எதிரே பாப்பக்காப்பட்டி பஞ்., பெரிய மலையாண்டிப்பட்டியை சேர்ந்த
நாகராஜ், 24, பாலகிருஷ்ணன், 18, ஆகியோர் வந்த பைக் நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளானது. இதில், நாகராஜூடன் பைக்கில் பின்னால் அமர்ந்து
வந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற மூவரும்
படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை
அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குளித்தலை போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.