/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாரி பின்பகுதியில் பைக் மோதி டெக்ஸ் கூலி தொழிலாளி பலி
/
லாரி பின்பகுதியில் பைக் மோதி டெக்ஸ் கூலி தொழிலாளி பலி
லாரி பின்பகுதியில் பைக் மோதி டெக்ஸ் கூலி தொழிலாளி பலி
லாரி பின்பகுதியில் பைக் மோதி டெக்ஸ் கூலி தொழிலாளி பலி
ADDED : ஆக 24, 2024 01:11 AM
குளித்தலை, ஆக. 24-
கரூர், வெங்கமேடு சோழன் நகரை சேர்ந்தவர் பாஸ்கர், 45. கரூர் டெக்ஸ் கூலி தொழிலாளி, கடந்த 21ல் இரவு தனக்கு சொந்தமான பேஷன் ப்ரோ பைக்கில், கரூரில் இருந்து கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாலாபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கிருஷ்ணராயபுரம் யூனியன் அலவலகம் அருகில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதி மீது மோதி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி இந்துமதி, 34, கொடுத்த புகார்படி மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.