/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விடை பெறுகிறது ஆடி மாதம்:வாழைத்தார்கள் விலை உயர்வு
/
விடை பெறுகிறது ஆடி மாதம்:வாழைத்தார்கள் விலை உயர்வு
விடை பெறுகிறது ஆடி மாதம்:வாழைத்தார்கள் விலை உயர்வு
விடை பெறுகிறது ஆடி மாதம்:வாழைத்தார்கள் விலை உயர்வு
ADDED : ஆக 11, 2024 02:11 AM
கரூர்:ஆடி மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், வாழைத்தார்களுக்கு விலை அதிகரித்து வருகிறது.
காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ள, கரூர் மாவட்டத்தில் விளையும் வாழை ரகங்கள், வெளிமாநிலங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. குளித்தலை, லாலாப்பேட்டை, மேட்டுமகாதானபுரம், மாயனுார், கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், நன்னியூர், வாங்கல், வெள்ளியணை பகுதிகளில் அதிகளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி ரகங்கள் உற்பத்தி, கரூர் மாவட்டத்தில் அதிகம். இங்கிருந்து தினமும், 75க்கும் மேற்பட்ட லாரிகளில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வாழைத்தார்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும். ஆடி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் இல்லாத நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு வாழைத்தார்கள் அனுப்புவது குறைந்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், வாழை உற்பத்தி அதிகரித்துள்ளதால், அங்கும் அனுப்ப முடியவில்லை. இந்நிலையில் நேற்று வாழைத்தார்களின் விலை சற்று அதிகரித்து.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஆடி மாதம் காரணமாக கடந்த, மூன்று வாரங்களாக வாழைத்தார்களை தோட்டத்துக்கு வந்து வாங்கி செல்வதை, வியாபாரிகள் தவிர்த்து வந்தனர். சுப விசேஷங்கள் இல்லாததால், வாழைக்கு தேவை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகளே வாழைத்தார்களை வெட்டி, மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று, குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். ஆடிப்பெருக்கு, அமாவாசை, ஆடிப்பூரம் விழா காரணமாக, வாழைத்தார்களுக்கு விலை சற்று அதிகரித்தது. வரும், 17ல் ஆவணி மாதம் துவங்குகிறது. தொடர்ந்து கார்த்திகை மாதம் வரை, திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் அதிகளவில் நடக்கும். இதனால், வாழைத்தார்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நேற்று, 350 ரூபாய் வரை விற்ற பூவன் வாழைத்தார், 450 ரூபாய், ரஸ்தாளி, 400 ரூபாயில் இருந்து, 450 ரூபாய், கற்பூரவள்ளி, 300 ரூபாயில் இருந்து, 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.