/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விளையாடி கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு
/
விளையாடி கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விளையாடி கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விளையாடி கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : ஜூன் 09, 2024 03:59 AM
அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே, வீட்டின் முன்புறம் விளையாடி கொண்டிருந்த சிறுவன் திடீரென மயக்கம் அடைந்து உயிரிழந்தான்.
சின்னதாராபுரம் அருகே நல்லிபாளையத்தை சேர்ந்தவர் திவாகரன், இவரது மனைவி லாவண்யா. இவர்களது மகன் தமிழ், 7. அவரது வீட்டிற்கு முன்புறம் தமிழ் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் தமிழை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.