/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'கரூர் மாவட்டத்தில் முதல்வரின் மருந்தகம் இரண்டு இடங்களில் செயல்படவுள்ளது'
/
'கரூர் மாவட்டத்தில் முதல்வரின் மருந்தகம் இரண்டு இடங்களில் செயல்படவுள்ளது'
'கரூர் மாவட்டத்தில் முதல்வரின் மருந்தகம் இரண்டு இடங்களில் செயல்படவுள்ளது'
'கரூர் மாவட்டத்தில் முதல்வரின் மருந்தகம் இரண்டு இடங்களில் செயல்படவுள்ளது'
ADDED : பிப் 23, 2025 03:58 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவ-லரும், பதிவுத்துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில், கரூர் மாவட்-டத்தில், முதல்வரின் மருந்தகம் செயல்படுத்தப்படவுள்ள இரு இடங்கள், மருந்து சேமிப்பு கிடங்கு, கொள்முதல் செய்யும் இடங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வட்டார போக்குவ-ரத்து அலுவலகத்தில், மினி பஸ் இயக்குவது தொடர்பாக அளிக்-கப்பட்ட விண்ணப்பங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்-கைகள் குறித்தும், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அளிக்-கப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை செய்ய வேண்டும். வீட்டு-மனைகள் அளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள், நிலத்தின் வகைப்பாடுகள், நிலத்தின் அளவுகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு செய்ய உத்தர-விடப்பட்டது. பின், தான்தோன்றிமலை, வாங்கல் பகுதிகளில் செயல்பட உள்ள முதல்வர் மருந்தகம் விற்பனை நிலையம் தயா-ராகி வருவதையும், பஞ்சமாதேவி பகுதியில் முதல்வர் மருந்த-கத்திற்கான மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு செயல்பட-வுள்ள இடமும் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பாபு, மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

