/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூதாட்டியை மர்ம நபர்கள் தாக்கியதில் ரத்த காயம்
/
மூதாட்டியை மர்ம நபர்கள் தாக்கியதில் ரத்த காயம்
ADDED : செப் 04, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., ராக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள், 80. நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 1:00 மணியளவில் வீட்டில் புகுந்த மர்ம நபர் கல்லால் மூதாட்டியை தாக்கி மூக்கில் காயம் ஏற்படுத்தினார். மூதாட்டியின் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் இவரது மகளுக்கு தகவல் தெரிவித்தனர். தனது தாயாரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.